முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம்

0
638
Mullivaikal remember day comments Angajan Ramanathan

(Mullivaikal remember day comments Angajan Ramanathan)
மே 18 ஆம் திகதி உயிர்நீத்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வை அனுஷ்டிக்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீரைக் காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான நாள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், உன்னத உறவுகள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் போராட்ட குணமும், கூடவே உணர்வுகளையும் வெளிப்படுத்துபவர்களாக, ஒருமித்த உணர்வோடு உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும்,

உரிமைக்காக பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டவர்கள் மீது, உறவுகளின் உணர்வலைகள் மீது தான் சார்ந்த நலன் வெளிப்பாடுகளை தூய ஆத்மாக்களின் அஞ்சலி நிகழ்வில் வெளிப்படுத்த இடமளிக்க முடியாது என்பதே அனைத்து தரப்பினருடைய எண்ணமும் விருப்பமுமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக உணர்வுபூர்வமான முறையில் ஒன்று சேரும் அஞ்சலி நிகழ்வில் இதுவரை காலமும் எந்தவிதமான செயலூக்கமும் இல்லாமல் தமது நலன்களுக்காக வலுவிழந்த செயற்பாடுகள் ஊடாக இவ்வாறான அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம்.

சிந்திய குருதி மண்ணோடு கலந்து உருக்களை மட்டுமல்ல மனங்களையும் சிதைத்து ஆறாத மனதோடு ஊசலாடும் வாழ்க்கையை வாழும் மக்கள் மீது சித்திரங்களை மீண்டும் வரையலாம் என கனவு காணாதீர்கள்.

இந்தத் தலைமுறையினரான நாம் வெளிப்படுத்துவது உணர்வுபூர்வமான போராட்ட வெளிப்படுத்தல்களே. உறங்கும் நம் உறவுகளுக்காக கண்ணீரை காணிக்கையாக்கி உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் எமது பூர்வபந்த ஆத்ம திருப்திக்காகவும் செயற்படுவோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Mullivaikal remember day comments Angajan Ramanathan