Guard Museum opening Tamil Nadu first time
தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்,
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள 140 ஆண்டுகள் பழமையான ஹாமில்டன் கிளப் கட்டடத்தை சீரமைத்து தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது, இதில் பல்வேறு காலகட்டங்களில் ராணுவம் மற்றும் காவல் துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன,
கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள், இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள், விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,
இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார், காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்களின் திறன் மேம்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்,
மேலும் கோவை விமான நிலையத்தில் இரவில் தங்கி அதிகாலையில் புறப்படும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
More Tamil News
- காவிரி நீர்ப் பங்கீடு வழக்கு : நாளை மாலை தீர்ப்பு!
- எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி விமர்சனம்!
- குதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா…?
- கர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா!
- விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு காரை கொடுத்து உதவிய கமல்ஹாசன்!
- தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவன்!
- தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைப்பு!
- மாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- இயக்குனராக உருவெடுக்கின்றார் நடிகர் அரவிந்த்சாமி!