400 இலங்கையர்களுக்கு இன்று இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்

0
230
tamilnews 400 expatriate Sri Lankans get dual citizenship

(tamilnews 400 expatriate Sri Lankans get dual citizenship)

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்ற சுமார் 400 இலங்கையர்களுக்கு இன்று இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க கூறினார்.

குறித்த நிகழ்வு இன்றையதினம் (16) பத்தரமுல்ல, சுகுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவித்தார்.

(tamilnews 400 expatriate Sri Lankans get dual citizenship)

More Tamil News

Tamil News Group websites :