கண்டி வன்முறைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் தீவிரவாத விசாரணை

0
716
Joint Opposition MP Dilum Amunugama investigate Terrorist Investigation

(Joint Opposition MP Dilum Amunugama investigate Terrorist Investigation)

கண்டி மற்றும் திகனயில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம 12 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தீவிரவாத விசாரணை பிரிவினரால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஷேஹான் சமரசிங்க ஆகியோரும் குறித்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வன்முறைச் சம்பவங்களின் போது சுமார் 200 வர்த்தக நிலையங்களும், பொதுச் சொத்துக்களும், சமய தலங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் தரப்பினருக்கு எதிராக குறித்த தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேவேளை, சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் குறித்த வன்முறைச் சம்பவங்களுடம் தொடர்பு கொண்டிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கண்டியில் பல இடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து கடந்த 9 ஆம் திகதி முதல் 12 ம் திகதி வரை மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு முன்னதாக வன்முறைகள் தொடர்பான எழுத்துமூல சாட்சிகளையும், ஆதாரங்களையும் ஆணைக்குழு கோரியிருந்தது.

இதனடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

(Joint Opposition MP Dilum Amunugama investigate Terrorist Investigation)

More Tamil News

Tamil News Group websites :