Husband murdered fraud wife arrested
சென்னை அண்ணாநகரில் கணவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நெஞ்சுவலியல் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்,
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் தம்பதியினர் கோபி – சுமித்ரா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், கோபி தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் மேலும் கோபியின் நண்பர் கலைச்செல்வனும் அதே டிராவல்ஸ் நிறுவனத்தில் அவரும் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார், கோபிக்கும் கலைச்செல்வனுக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது இவர்கள் இருவரும் நேற்று வேலை முடிந்தவுடன் ஒன்றாக மது அருந்தியுள்ளனர் இதனையடுத்து கோபி அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் அவரை கலைச்செல்வன் அவருடைய வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்,
அதன் பிறகு கோபிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக அவருடைய மனைவி சுமித்ரா அக்கம்பக்கத்தினரிடம் கூறி அவர்களின் உதவியுடன் கோபியை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கு கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் உங்கள் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்,
பிறகு கோபியின் கழுத்தில் இருந்ததால் அவருடைய மரணத்தில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது பிறகு கோபியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் கழுத்தை நெரித்து கொள்ளப்பட்டது உறுதியாகியுள்ளது,
அதன் பின்னர் காவல்துறையினர் மேலும் இந்த கொலை பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்,
விசாரணையில் – கோபி கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி மீது டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார் அதில் எனது மனைவிக்கும் கலைச்செல்வனுக்கும் தகாத உறவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது பிறகு காவல்துறையினர் சுமித்ராவையும் கலைச்செல்வனையும் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது பிறகு காவல்துறையினர் கோபி கொலை வழக்கில் சுமித்ராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது,
விசாரணையில் சுமித்ரா நானும் கலைச்செல்வனும் திட்டமிட்டு கொலைசெய்ததாக கோபியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் மேலும் தனது குழந்தைகளை கோபியை கொலை செய்ய திட்டமிட்ட நாளில் எனது தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக இந்த விசாரனையில் கூறியுள்ளார்….
More Tamil News
- சென்னையில் குளிர்சாதன பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை பலி!
- +2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ – மாணவிகளின் தேர்ச்சி விகிதம்!
- நவாலி படுகொலை; உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
- மீனவர்கள் எச்சரிக்கை; இன்று பேச்சுவார்த்தை
- வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்