பரிஸில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மெழுகு சிலை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.French president wax statue sensation
பரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில், ஜேர்மனியின் Angela Merkel இன் சிலைக்கு அருகே, இமானுவல் மக்ரோனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக இதுவரை திறக்கப்படவில்லை.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த மெழுகு சிலையின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது தவிர, அவர்களது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், மெழுகு சிலையின் புகைப்படமும், இமானுவல் மக்ரோனின் உண்மையான புகைப்படத்தையும் இணைத்து, உருவ ஒற்றுமைக்கான வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது.
அதில் பலர் 10 க்கு 3 என மட்டுமே உருவ ஒற்றுமைக்காக வாக்களித்துள்ளனர். அதிலும் சிலர் மக்ரோன் அணிந்துள்ள ஆடை மட்டுமே ஒரே போன்று உள்ளது எனவும், மக்ரோனின் உருவம் வேறு ஒருவர் போல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது மிக வேகமாக பரவி வருவதுடன், பல கருத்துக்களுக்கும், கிண்டல்களுக்கும் உள்ளாகியுள்ளது.
**Most Related Tamil News**
- டுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி!
- “என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை
- பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!