அரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

0
734
sltb bus workers leave temporarily canceled

(sltb bus workers leave temporarily canceled)
நாடாளாவிய ரீதியில இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்தள்ளதையடுத்து அரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பஸ் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் அவ்வாறு அரசாங்கம் பஸ்கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுடுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 6.56 வீதமாக அதிகரிக்கவும் ஆரம்ப கஸ் கட்டணத்தில் எவ்விமாற்றமும் செய்யாமலும் இருக்க அரசாங்கம் தீர்மானித்தது.

இந்நிலையிலேயே இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/15/tamilnews-complaint-mysteriously-lost-child-found-buried-untimely/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :