பிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..!

0
331
Arun Vijay act Prabhas Saaho movie,Arun Vijay act Prabhas Saaho,Arun Vijay act Prabhas,Arun Vijay act,Arun Vijay

(Arun Vijay act Prabhas Saaho movie)

சுஜீத் இயக்கத்தில், பிரபாஸின் ”சாஹோ” படத்தில் அருண் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அருண் விஜய் அடம் பிடிப்பது இல்லை. வரலட்சுமி சரத்குமாரை போன்று தன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

இவ்வாறு அவர் தனது கொள்கையை மாற்றியதால் அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கி வரும் ”செக்கச் சிவந்த வானம்” படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். அவர் தனது போர்ஷனை நடித்து முடித்து விட்டார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் அவர் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அத்துடன், பிரபாஸ் நடித்து வரும் ”சாஹோ” படத்தில் அருண் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ”செக்கச் சிவந்த வானம்” படப்பிடிப்பு முடித்த கையோடு அருண் விஜய் அபுதாபிக்கு கிளம்பி விட்டார்.

அதாவது, ”சாஹோ” படத்தின் படப்பிடிப்பு தற்போது அபுதாபியில் நடந்து கொண்டிருக்கிறது. சில முக்கியமான சண்டை காட்சிகளை அங்கு படமாக்கி வருகின்றனர். அபுதாபியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.

”சாஹோ” படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கவில்லை என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். அவர் கதாபாத்திரம் எந்த மாதிரியானது என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

இந்நிலையில்,  எழுத்தாளர் பாலக்குமாரன் மறைவு குறித்து அறிந்த அருண் விஜய் கவலை அடைந்தார். அத்துடன், அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

மீண்டும் ஆபாசத்திற்கு மாறிய சன்னிலியோன் : கவர்ச்சிக் கடலாக அள்ளி எறியும் புகைப்படம் வைரல்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Arun Vijay act Prabhas Saaho movie

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

அனுருத்த பொல்கம்பல கைது