முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

0
788
Former mayor Danz Omar passed away, malaysia tamil news, malaysia, malaysia news, mayor Danz Omar,

{ Former mayor Danz Omar passed away }

மலேசியா: ஐ.ஜே.என் எனப்படும் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மேயர், டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் நேற்று இரவு 7.15 மணி அளவில் காலமானார்.

82 வயதான அலியாஸ் உடல்நிலை குறைவாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாகவும் நேற்று அவர் இறந்துவிட்டதாக தனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவரின் இளைய சகோதரர் டத்தோஸ்ரீ ஹனிபா ஓமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

டான்ஸ்ரீ அலியாஸ் தேசியப் பூப்பந்துக் கழகத்தின் தலைவராக 1987ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

மேலும், 1992ஆம் ஆண்டு நடைபெற்ற தோமஸ் கிண்ணப் போட்டியில் மலேசியா வெற்றி பெற அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அத்தோடு, டான்ஸ்ரீ அலியாஸ் 1987ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை கோலாலம்பூர் கால்பந்துக் கழகத்தின் தலைவராகவும் மலேசியா கோப்பையை வென்றிட உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

1981ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை கோலாலம்பூரின் மூன்றாவது மேயராக பதவி வகித்து வந்த பின்னர், அவர் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு ஆணையாளராக 2005ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Former mayor Danz Omar passed away

<< RELATED MALAYSIA NEWS>>

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

*ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!

*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

 

<<Tamil News Groups Websites>>