வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

0
514

(Mullivaikal Day Commemoration event Valikamam West Pradeshiya Sabha)
வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தவிசாளர் த. நடனேந்திரன், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

வலி. மேற்கு பிரதேச சபையின் மூன்றாவது கூட்டம் நேற்று பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 8.45 மணிவரை இடம்பெற்றது.

கூட்டத்தின் நிறைவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி இந்தச் சபையில் தீபமேற்றி அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ந. பொன்ராசா கோரிக்கை முன்வைத்தார்.

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைந்து மே – 12 தொடக்கம் மே – 18 வரை வலி சுமந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வாரத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் நினைவேந்தல்கள் நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் 18 ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலிலும் மேலும் சில இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

எனவே, படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு இந்தச் சபையிலும் நாம் இன்று அஞ்சலி செலுத்த சபை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கையை தவிசாளரும் உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். அதையடுத்து அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அக வணக்கம் செலுத்தினர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Mullivaikal Day Commemoration event Valikamam West Pradeshiya Sabha