கார் மோதியதில் ஒருவர் பலி: மூதாட்டி படுகாயம்!

0
654
Brisbane Accident

Brisbane Accident

பிரிஸ்பேனில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

லெவிங்டன் மற்றும் லோகன் வீதிப் பகுதியிலேயே இவ்விபத்து பெற்றுள்ளது. வேகமாக வந்து மோதிய கார் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் உயிரிழந்த ஆண் 22 வயதானவர் எனவும் காயமடைந்தவர் 72 வயதான பெண்ணொருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விபத்தில் காயமடைந்த பெண் பிரின்சஸ் அலெக்ஸாண்ரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.