அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

0
168
DD Personal life open talk,DD Personal life open,DD Personal life,DD Personal,DD

(DD Personal life open talk)

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி.

இவர் தனக்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

2017 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி பெண் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை டைம்ஸ். இந்த பட்டியலில் டிடிக்கு தான் முதல் இடம் கிடைத்துள்ளது.

அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி பிரபலமாக தேர்வு செய்யப்பட்டதில் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். ”மக்களுக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும், ஆனால் விரும்பப்பட்டவளாக இருப்பது தெரியாது” என்கிறார் டிடி.

அத்துடன், கேமராவுக்கு முன் வந்து நிற்க தற்போதும் நான் பயப்படுகிறேன். புதுப் படம் அல்லது நிகழ்ச்சியின் ஷூட்டிங் துவங்கும் முன்பு பயத்தில் நான் வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது என டிடி தெரிவித்துள்ளார்.

மேலும், ”எனக்கு தனியாக சாலையை கடந்து செல்லத் தெரியாது. எனக்கு சைக்கிள் மட்டுமே ஓட்டத் தெரியும். ஸ்கூட்டரோ, காரோ ஓட்டத் தெரியாது. கற்கவும் முயற்சி செய்யவில்லை” என்று டிடி கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ”எனக்கு 13-14 வயது இருக்கும்போது மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ மாட்டேன் என்று என் தந்தைக்கு வாக்குறுதி அளித்தேன். அதனால் தற்போது வரை அதை நான் செய்தது இல்லை. மது அருந்துவோரின் அருகில் இருந்தாலும் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றியது இல்லை” என்கிறார் டிடி.

மேலும், ”2 ஆண்டுகளுக்கு முன்பு நான் டிவியில் இருந்து பிரேக் எடுத்தேன். நான் பிரேக் எடுத்ததற்கான காரணம் மக்களுக்கு தெரியாது. என் முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டு நான் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் நான் குணமடைந்து நன்றாக நடக்கிறேன்” என டிடி தெரிவித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!

Tags :-DD Personal life open talk

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.