சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஏமாற்றம் அடைந்த சுவிஸ் விவசாயிகள்!!

0
563
Swiss farmers disappointed China free trade, Swiss farmers disappointed China free, Swiss farmers disappointed China, Swiss farmers disappointed, Swiss farmers, Tamil Swiss news, Swiss Tamil news

(Swiss farmers disappointed China free trade)

சுவிட்சர்லாந்திற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின், விவசாய ஏற்றுமதிகளில் ஏற்றம் பெறும் வேளையிலும் சுவிஸ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.

சீனாவுடனான சுதந்திர வர்த்தகம் – 2014 ஆம் ஆண்டு முதல் புழக்கத்திற்கு வந்த நாளிலிருந்து நிச்சயமாகவே சுவிஸ் விவசாயம் சேதப்படுத்தப்படவில்லை. அதனை விவசாய தொழிற்சங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட நன்மைகள் இது நாள் வரை நிறைவேற்றித் தரப்படவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

சீனாவிற்கான, சுவிஸ் ஏற்றுமதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கீடு 1.2% ஆக இரட்டிப்பாகியுள்ளது. இந்த ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்தது குழந்தை உணவு பொருட்கள்.

இதனுடன் காபி மற்றும் சாக்லேட் இணைந்து, சீனாவுக்கான உணவு ஏற்றுமதி 70% ஆக அதிகரித்தது. எனினும் இந்த அதிகரிப்பு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினால் நிகழவில்லை. 2008 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான சீன தயாரிப்பில் மெலமைன் கலப்பு அதிகம் காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு பின்னிருந்து சீனாவுக்கான சுவிஸ் உணவு ஏற்றுமதி அதிகரித்தது என விவசாயிகள் குழுக்கள் தெரிவித்தன.

Swiss farmers disappointed China free trade, Swiss farmers disappointed China free, Swiss farmers disappointed China, Swiss farmers disappointed, Swiss farmers, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites