பிரான்ஸ் தலைநகரான பரிஸின் மத்திய பகுதியில் சனிக்கிழமை மாலை தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி ரஷ்ய குடியரசான செச்சன்யாவில் 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்று நீதிமன்றத்திலிருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 21 year old man attack paris using knife
பரிஸின் இரண்டாம் வட்டாரத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆயுததாரி தனது கத்தியால் 29 வயதான ஒரு நபரை கொன்றுள்ளார் என முன்னதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்னர், பரிஸின் ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ‘அல்லாஹ் அக்பர்’ என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழுவே சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர்களில் ஒருவர்தான் நடத்தியதாக தெரிவித்துள்ளது. பரிஸில் கேளிக்கை மற்றும் இரவு வாழ்க்கைக்கு பெயர் போன ஒரு பகுதியிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இதனால் அங்கிருந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கஃபே மற்றும் உணவு விடுதிகளுக்குள் நுழைந்துள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவம் பற்றி டுவிட்டரில் ”இன்று மீண்டும் பிரான்ஸ் தனது மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளது. ஆனால், நமது எதிரிகளிடம் ஒரு துளிகூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
**Most Related Tamil News**
- கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!
- விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி
- Google சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்!