பரிஸில், அல்லாஹ்வை கூப்பிட்டு கொண்டே தாக்குதல் நடத்திய நபர்!

0
856
Paris attack-person kill using knife

பரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள Opéra பகுதிக்கு அருகாமையில், சனிக்கிழமை(மே 12) இரவு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்துள்ளனர்.Paris attack-person kill using knife

அதிக சுற்றுலாப்பயணிகள் குவியும் இடமான இரண்டாம் வட்டாரத்தில் உள்ள rue Monsigny இல் 9 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்றுகொண்டிருந்த சிலர் மீது நபர் ஒருவர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளார். குறித்த நபர் கூரான கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்டவாறு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஒருவர் பலியானதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவர் உயிருக்கு போராடும் நிலையில் Georges Pompidou மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்திய நபர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற ஒரு மணி நேரத்தின் பின்னர், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டுவரும் பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**