(300 police officers Received bribes Nissanka Senadhipathi)
300இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள், பணம் பெற்றனர் என வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் பெற்ற 300 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன.
இதில், குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிசங்க சேனாதிபதியிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தான் பணம் வழங்கவில் என அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணம் பெற்றுக்கொள்ளவும் இல்லை தான் இலஞ்சம் வழங்கவும் இல்லை.
இலஞ்சம் வழங்கியதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.
முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கூடைப்பந்தாட்டம், ரகர் போன்ற விளையாட்டுக்களுக்கு தமது நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது. இது தொடர்பிலான எழுத்து மூல கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் தம்மிடம் உண்டு.
ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டமை அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்
- பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மற்றுமொரு சோகம்; இரத்த வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
(300 police officers Received bribes Nissanka Senadhipathi)