(Military resolution release 522 acres land North East)
தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் 522 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க இராணுவம் இணங்கியுள்ளது.
தனியார் காணிகளில் இருந்து வெளியேறும் இராணுவத்தை, மற்றுமொரு இடத்திற்கு மாற்றுவதற்காக 866 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதனும் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதற்கமைவாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, முகாம்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்துவரும் காணி உரிமையாளர்களை மீண்டும் அந்த இடங்களில் குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான நான்காயிரத்து தொள்ளாயிரத்து 92 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 522 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- உயிரைப் பணயம் வைத்து தாயகம் திரும்பும் ஈழத் தமிழர்கள்
- மயிலைப் பார்க்க சென்ற சிறுவர்களுக்கு கிடைத்த மனித எச்சங்கள்
- எரிபொருள் விநியோகிக்காத 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- மற்றுமொரு சோகம்; இரத்த வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Military resolution release 522 acres land North East