பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் நோக்கில் பெங்களூர் – பஞ்சாப் அணிகள்…!

0
722
kings xi punjab vs royal challengers bangalore today match news

(kings xi punjab vs royal challengers bangalore today match news Tamil)

ஐ.பி.எல். தொடரின் பிளேஆஃப் சுற்றினை தக்கவைக்கதற்கான முக்கிய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி இந்தூர் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இரு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த வெற்றியானது பெங்களூர் அணி பெற்ற முதல் வெற்றியாகவும் பதிவாகியது.

இந்நிலையில் இன்றைய போட்டியானது இரண்டு அணிகளுக்கும் கட்டாய வெற்றியினை நோக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்து வந்த பெங்களூர் அணி இறுதியாக டெல்லி அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்று, எழுச்சியுடன் இன்றைய போட்டிக்கு முகங்கொடுக்கவுள்ளது.

எனினும் இந்தூரில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி மோசமான பந்து வீச்சினால் தோல்வியடைந்திருந்த நிலையில் இன்று களமிறங்குகிறது.

இதேவேளை இன்றைய போட்டியில் கடந்த வருடம் பெங்களூர் அணியின் விளையாடிய கே.எல்.ராஹுல் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் இன்று பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளமை அணிக்கு மேலும் பலமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<<Tamil News Group websites>>