உலகத்திலேயே ‘தன் வாழும் காலம் வரை ஊதியம் இல்லாமல் வேலை செய்யும்’ உன்னதப்பிறவி தாய்!

0
2163

(Happy Mothers Day Wishes Tamil News)

உலகத்தில் வாழும் அம்மாக்களுக்கு ‘இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்’

உலகத்திலேயே வரையறுக்க முடியாத அளவு அன்பு, அளவிடமுடியாத பாசம், சுயநலமே இல்லாத இதயம், எப்போதும் வெறுப்பை காட்டாத முகம் என சொல்லி கொண்டே போகலாம். அத்தனைக்கும் இலக்கணமான ஒரு வடிவம் என்றால் அது தாய்.

தனது இரத்தத்தை பால் ஆக்கி, பத்து மாதங்கள் தவம் இருந்து, வலிகளை பொறுத்து பிள்ளைதனைப் பெற்று தன்னை பற்றி எதுவும் சிந்திக்காமல், தனக்காக எதுவும் வைக்காமல், தன் விருப்பத்தை வெளியில் காட்டாமல் எப்போதும் தன் குடும்பத்துக்காகவே வாழும் அன்னையர்களுக்கு வருடத்தில் ஒருநாள் மட்டும் விழா எடுப்பது போதாது என்றே சொல்ல வேண்டும்.

தன் பிள்ளை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வருவதற்கு அவள் படும் கஷ்டம் கொஞ்சமல்ல. அம்மா இல்லாத வீடு சூடு காடு என்பது ஒரு சாலச் சிறந்த கூற்று. தாய் இல்லா வீடு முழுமையடையாது.

தாய் அவள் தன் கணவனுக்கு பணிவிடை செய்து, பிள்ளைகளை கவனித்துக் கொண்டு, அனைத்து வேலைகளையும் செய்து எந்த கூலியும் எதிர் பாக்காமல் வாழும் ஒரு தெய்வம்.

உலகத்தில் தான் செய்யும் வேலைக்கு கூலி எதிர்பாக்காமல் சாகும் நாள் வரை தன் குடும்பத்துக்காகவே வாழும் ஒரு ஜீவன் அன்னை.

இத்தகைய ஒரு கடவுளின் மறுவடிவமான தாயை இன்று மட்டும்மல்லாமல் என்றும் போற்றி தாய்க்கு நாம் எம்மால் இயன்ற பணிவிடைகள் செய்து அன்னையரை சந்தோசமாக வைத்திருக்க சபதமிடுவோம்.

உலகத்தில் வாழும் தாய்மாருக்கு’ எமது இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்!’

Tag: Happy Mothers Day Wishes Tamil News