ban bath waterfall bambarakandha warning disaster management
பம்பரக்கந்த நீர்வீழ்ச்சியின் நீரின் அளவு அதிகரித்துள்ளமையினால் சுற்றுலா பயணிகளை குறித்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்வையிட வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட வருடங்களுக்கு பின்னர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியின் நீரோட்டம் அதிகரித்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பண்டாரவளை, பதுளை, ஹல்துமுல்ல போன்ற பகுதிகளில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.
பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாகவும், நீர்வீழ்ச்சியில் நீராடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீராட சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ban bath waterfall bambarakandha warning disaster management
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com