இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் விஜித ஹேரத் சாதனை

0
41

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும், அனில் ஜயரத்ன பெர்னாண்டோ 1 62, 433 வாக்குகளையும், மஹிந்த ஜயசிங்க 137, 315 வாக்குகளையும், எச் டி கிறிசாந்த சில்வா அபேசேன 121, 825 வாக்குகளையும், எம்.எம் மொஹமட் முனீர் 109,815 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஆர்.ஏ அசோக சப்புமல் ரன்வல 109,332 வாக்குகளையும், என்.டி விஜேசிங்க 83,061 வாக்குகளையும், ருவன் நிஷாந்த மாபா கம 78,623 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ஹர்சன ராஜகருணா 67,004 வாக்குகளையும், காவிந்த ஜயவர்தன 37,597 வாக்குகளையும், அமில பிரசாத் 23,699 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஹரிணி அமரசூரிய இம்முறை அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். அவர் 655,289 வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார். அவர் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.