சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த பட்லர்!!!

0
608
Rajasthan royals beat Chennai super kings 2018 news Tamil

(Rajasthan royals beat Chennai super kings 2018 news Tamil)

ஐ.பி.எல்.தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.

பிளே-ஆஃப் சுற்றின் வாய்ப்பை தக்கவைக்கும் கட்டாய வெற்றியினை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சுரேஷ் ரெய்னா 35 பந்துகளுக்கு 52 ஓட்டங்களையும், டோனி 23 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் ஜொப்ரா ஆச்சர் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் அதிரடியுடன் 19.5 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது.

ராஜஸ்தான் அணிசார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பட்லர் 95 ஓட்டங்களையும், ஸ்டுவர்ட் பின்னி 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி நேற்று வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் 4ம் மற்றும் 5ம் இடங்களில் முறையே மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளும் 10 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>