‘ஏன் இப்படி செய்தார்கள்? மன வருத்தமாக இருக்கின்றது”

0
895
cv wigneswaran sad jaffna students activities

(cv wigneswaran sad jaffna students activities)
“தமிழினப் படுகொலை நாளான மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபை ஒழுங்குமுறையில் மேற்கொண்டுவரும்போது, இடையில் வந்து நாங்கள் செய்ய போகிறோம், நீங்கள் எல்லோரும் எங்களுடன் வாருங்கள் என யாழ். பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்திருப்பது சரியானதல்ல. அவர்கள் ஏன் இதனை இப்படி செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களுடைய இந்நடவடிக்கை எனக்கு மன வருத்தை தருகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஸ்டிப்பு தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு தொடர்பில், முதலமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்துவதுக்காக ஒரு சொல்லை பயன்படுத்தினால், ஊடகங்கள் அதனை பிழையாக சித்தரிக்கின்றன.
“தமிழினப் படுகொலை நாளான மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபை ஒழுங்குமுறையில் மேற்கொண்டுவரும்போது, இடையில் வந்து நாங்கள் செய்ய போகிறோம், நீங்கள் எல்லோரும் எங்களுடன் வாருங்கள் என யாழ். பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்திருப்பது சரியானதல்ல. ஏன் இவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள் என தெரியவில்லை.

பல்கலைக்கழக மாணவர்கள் இந்நினைவு நாளை நாங்கள் முன்னின்று நடாத்தப்போகின்றோம், அதற்கு உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் என முன்னரே எங்களுடன் கேட்டிருந்தால் நாங்கள் அது தொடர்பாக ஏனைய மாகாண சபை உறுப்பினர்களோடும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

அதேநேரம் வடக்கு மாகாண சபை மூன்றாண்டுகளாக இதனை ஒழுங்காக செய்து வரும் நிலையில் நீங்கள் எல்லோரும் எங்களுடன் வாருங்கள் என அவர்கள் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.

இந்நிகழ்வை யாரேனும் செய்யாதிருந்தால் அதனை இவர்கள் எடுத்து செய்திருந்தாலும் அதனை நாம் வரவேற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் இதனை இப்படி செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களுடைய இந்நடவடிக்கை எனக்கு மன வருத்தை தருகின்றது” என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :