காணாமல் போனோர் : மன்னாரில் இன்று பணியை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்

0
570
missing persons commission start work today mannar

(missing persons commission start work today mannar)
காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது.

இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக பிராந்திய ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் திட்டம், உபாயங்கள், தற்போதைய நிலைப்பாடு, தொடர்பாக விளக்கமளிக்கவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், பரிந்துரைகளை தெரிவிப்பதற்கும் இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட 7 ஆணையாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :