கத்தாரில் புனித ரமழானை முன்னிட்டு மளிகை பொருட்கள் விலை குறைப்பு!

0
634
holy Ramadan reduction price food products Qatar

(holy Ramadan reduction price food products Qatar)

புனித ரமழான் மாதம் இன்னும் சில நாட்களில்ஆரம்பிக்க படவுள்ளதை அடுத்து சுமார் 500 வகையான அன்றாடத் உணவுத் தேவைக்கு பயன்படும் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விலையை கத்தார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கான அமைச்சகம் குறைத்துள்ளது

இந்த அதிரடி விலை குறைப்பு ஞாயிறு முதல் ஆரம்பித்து ரமலான் மாதம் இறுதி வரை அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த விலை குறைப்பு அறிவிப்பின் மூலம் பால், இறைச்சி, தேன், பிஸ்கட்டுகள், மாவு, சீனி, அரிசி, பாஸ்தா, சமையல் எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பற்றி முழு விபரங்கள் அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்களின் வழியாகவும் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கத்தார் நாட்டு பிரஜைகளுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்களான பால் மற்றும் சக்கரையின் அளவும் புனித ரமலானுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அமைச்சகத்தின் உத்தரவை மீறி சட்ட விரோத காரியங்களில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

(holy Ramadan reduction price food products Qatar)

More Tamil News

Tamil News Group websites :