அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் வெற்றியீட்டியது டெர்பி கவுண்டி

0
587
Derby County vs Fulham Championship play-off semi-final

(Derby County vs Fulham Championship play-off semi-final)

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஷிப் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் டெர்பி கவுண்டி அணி வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உதைப்பந்தாட்ட தொடர்களில், பிரீமியர் லீக் தொடரையடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொடராக சம்பியன்ஷிப் கருதப்படுகிறது.

24 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் அரையிறுதியின் முதலாவது லீக் போட்டியில் டெர்பி கவுண்டி மற்றும் புல்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதற்பாதியில் டெர்பி அணியின் கெமரோன் ஜெரோம் 34வது கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து முதற்பாதியின் மிகுதி நேரத்திலும், இரண்டாவது பாதியிலும் புல்ஹாம் அணி கோலடிக்க தவறியதால் டெர்பி அணி 1-0 என வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்குமிடையில் அடுத்து நடைபெறவுள்ள அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியின் வெற்றியின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு எந்த அணி தகுதிபெறும் என்பது அறிவிக்கப்படும்.

<<Tamil News Group websites>>