பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!

0
759
Heavy vehicle suddenly burned Seine-et-Marne

கடந்த புதன்கிழமை(மே 9) காலை Seine-et-Marne இல் வீதியில் நின்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இவ் வாகனம் 34,000 லீற்றர் டீசலுடன் எரிந்ததால் பெரும் தீ விபத்தாக மாறியது.Heavy vehicle suddenly burned Seine-et-Marne

Fontainebleau பகுதியில் மே 9 காலை 8.30 மணிக்கு D607 வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது. தீப்பற்றியதற்குரிய காரணம் இன்னும் அறியமுடியவில்லை.

வாகனத்தில் 34,000 லீற்றர்கள் டீசல் எரிபொருள் இருந்துள்ளதால், பாரிய சத்தத்துடன் பெரும் தீ பிளம்பாக மாறி வெடித்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன், வாகன சாரதி ஒருவரும் தீக் காயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 80 தீயணைப்பு வீரர்கள் தீயை பெரும் போராட்டத்தின் மத்தியில் அணைத்தனர். வாகனம் முற்றாக எரிந்துள்ளது. 38 வாகனங்களில் தீயணைப்பு வாகனம் தண்ணீர் பாய்ச்சி தீயை அணைத்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**