கூலிபடையை வைத்து என்னை கொல்ல சதி – மம்தா பெனர்ஜி

0
523
Chief Minister Mamata Banerjee plot going kill mercenarie

Chief Minister Mamata Banerjee plot going kill mercenarie

கூலிப்படையை வைத்து என்ன கொல்ல சதி திட்டம் நடக்கிறது என இந்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பெனர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் தெரிவித்துள்ளதாவது,

என்னை கொலை செய்வதற்கு கூலிபடையினர் மூலம் ஏற்கனவே சதி திட்டம் தீட்டப்பட்டது. முதலில் ஒருவருடைய சுய மரியாதையை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது.

அந்த வகையில் அரசியல் கட்சி என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டி உள்ளது என்பது எனக்கு தெரியும். என்னை கொலை செய்ய என்னுடைய வீடு, அலுவலகம் என எல்லாவற்றையும் கூலிப்படையினர் உளவு பார்த்துவிட்டார்கள். மரணத்துக்கு நான் அஞ்சுபவள் கிடையாது.

வீட்டை மாற்றுமாறு எனக்கு பொலிஸ் மற்றும் உளவுத்துறை, அறிவுரை வழங்கினர். உயிருக்கு பயந்து நான் வீட்டை மாற்றமாட்டேன். மேற்குவங்க மக்களை நான் விரும்புகிறேன்.

அவர்களின் வளர்ச்சிக்காக என்றும் பணியாற்றுவேன். என்னை யாரும் மிரட்டவும் முடியாது. மக்களுக்கான எனது பணியை தடுக்கவும் முடியாது. அரசியலில் எதையும் எதிர்க்கொள்ள தயார் எனத் தெரிவித்துள்ளார்.

Chief Minister Mamata Banerjee plot going kill mercenarie

More Tamil News

Tamil News Group websites :