‘வருமான வரியை ஒழிக்க வேண்டும்’ – சுப்ரமணியன்சுவாமி

0
463
generate savings country Subramanian Swamy senior leaders said

generate savings country Subramanian Swamy senior leaders said

“வருமான வரியை ஒழித்துக் கட்டுவதால் நாட்டில் அதிகளவில் சேமிப்பு உருவாகும்” என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

இந்தியாவில் வருமானவரி செலுத்துவோர் சதவீதம் மிகக் குறைவு. அவர்களுக்காக மக்கள் மீது அதிக வரிச்சுமையை ஏன் ஏற்ற வேண்டும்.

நடுத்தர குடும்பத்தினருக்கும் சிறு தொழில் முனைவருக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வரிமான வரியை ஒழிக்க வேண்டும். இதனால் நாட்டில் சேமிப்பு உருவாகி, மூதலீடுகள் பெருகும். நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

வருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையை விட, மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும்.

மேலும், இயற்கை வளங்கள் மற்றும் 2ஜி முதல் 5ஜி வரை உள்ள ஸ்பெக்ட்ரம்களை முறைப்படுத்தி ஏலம் விடுவதன் மூலம் நிதி ஆதாரம் அதிகம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

generate savings country Subramanian Swamy senior leaders said

More Tamil News

Tamil News Group websites :