சாவகச்சேரியில் சற்றுமுன்னர் விபத்து; இருவர் வைத்தியசாலையில்

0
1685
eastern province earavur front university accident 6 wounded

(Accident Chavakachcheri Two others injured)
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் என்ற 23 வயதுடையவரும் கிருஷ்ணகுமார் நிறுஜன் என்ற 15 வயதுடையவரும் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Accident Chavakachcheri Two others injured