வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது

0
701

(Vasthu sastram today horoscope)

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்துவிட்ட மா இலைகளிலும், அதன் சக்தி குறையாது.வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்சனைகள். வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை. சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம்.

மாவிலை ஒரு கிருமிநாசினி இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. காய்ந்து உலரும்.

இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெறும் முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலை தோரணம் கட்டுகின்றோம்.

நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள். விசேஷங்களுக்கு மட்டும்தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.

‘மாவிலை’ கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.

Source by:newlanka.lk

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Vasthu sastram today horoscope