தொடர் கொலை மிரட்டல் : சிக்கல்களில் தவிக்கும் பிரகாஷ்ராஜ்..!

0
779
Actor Prakash Raj threats Gowri Lankesh Murder,Actor Prakash Raj threats Gowri Lankesh,Actor Prakash Raj threats Gowri,Actor Prakash Raj threats,Actor Prakash Raj

(Actor Prakash Raj threats Gowri Lankesh Murder)

தென்னிந்திய மொழி படங்களிலும் இந்தியிலும் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் வந்து பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று கைநிறைய சம்பளமும் வாங்கி பிரபலமானவர் பிரகாஷ்ராஜ்.

அதுமட்டுமல்லாமல், இவரது கால்ஷீட்டுக்காக முன்னணி கதாநாயகர்களே காத்திருந்த நிலை இருந்தது. அப்படிப்பட்ட பிரகாஷ்ராஜுக்கு சமீபகாலமாக தொடர்ந்து சிக்கல்கள்.

இவரது நெருங்கிய தோழியும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் பெங்களூரில் கொலை செய்யப்பட்டதில் இருந்து மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.

மேலும், டுவிட்டரில் கண்டித்து விமர்சனங்கள் பதிவிட்டார். நடக்க உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரமும் செய்தார்.

இதனால் பிரகாஷ்ராஜுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அவரது காரை மறித்தும் தகராறு செய்தனர். அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புகள் கிளம்புகிறது. இதனால் இந்தி படங்களில் பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்ய அஞ்சுகிறார்கள்.

மைசூருவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிரகாஷ்ராஜ், நிருபர்களிடம் கூறும்போது.. :-

“நான் பா.ஜனதாவுக்கும் இந்து அமைப்புகளுக்கும் எதிராக பேசி வருவதால் என்னை கொல்ல சதி நடக்கிறது. சில அமைப்புகள் நேரடியாகவே எனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளன. நான் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம். அதற்காக நான் அஞ்சவில்லை” என்றார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

வசூலில் 2000 கோடியை நெருங்கிய பாகுபலி 2 : உச்சம் தொட்ட வசூல் சாதனை..!

ரன்பீர் கபூர் – அலியாபட் இடையே புதிதாக மலர்ந்த காதல் : பாலிவுட்டில் பரபரப்பு..!

நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேஷ்..!

மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Actor Prakash Raj threats Gowri Lankesh Murder

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-05-2018