ரிஷாப் பாண்ட்டின் ருத்ரதாண்டவம் வீண்! : பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது ஹைதராபாத்!

0
544
sunrisers hyderabad beat Delhi Daredevils 2018 news Tamil

(sunrisers hyderabad beat Delhi Daredevils 2018 news Tamil)

ஐ.பி.எல். தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் முதல் அணியாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி மாறியுள்ளது.

நேற்றைய போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுக்க, அடுத்து களமிறங்கிய சிரேயாஷ் ஐயரும் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

எனினும் களத்தில் நின்ற ரிஷாப் பாண்ட், இம்முறை ஐ.பி.எல். தொடரின் சிறந்த பந்து வீச்சு அணியாக வலம் வரும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களை தினறடித்தார்.

63 பந்துகளை சந்தித்த ரிஷாப் பாண்ட் 7 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கலாக 128 ஓட்டங்களை குவித்தார். ஐ.பி.எல். தொடரில் இந்திய வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டமாகும் இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியது.

ரிஷாப் பாண்ட்டின் அதிரடி ஓட்ட எண்ணிக்கையுடன் டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் சகிப் அல் ஹசன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

எனினும் கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சிக்கர் தவான் மற்றும் வில்லியம்ஸன் ஜோடி அதிரடியாக ஓட்டங்களை குவித்தது.

சிக்கர் தவான் 50 பந்துகளை சந்தித்து 92 ஓட்டங்களை குவிக்க, வில்லியம்ஸன் 53 பந்துகளுக்கு 83 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் 18.5 ஓவர்கள் நிறைவில் 191 ஓட்டங்களை குவித்து வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 18 புள்ளிகளை பெற்று ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளதுடன், டெல்லி அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

<<Tamil News Group websites>>

sunrisers hyderabad beat Delhi Daredevils 2018 news Tamil, sunrisers hyderabad beat Delhi Daredevils 2018 news Tamil