நான் மைத்திரியிடம் மன்னிப்பு கோரவில்லை : பொய் என்கிறார் பொன்சேகா

0
652
sarath fonseka said not ask apologize maithripala

(sarath fonseka said not ask apologize maithripala)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் மன்னிப்பு கோரவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம்(8) பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவு பெற்றதன் பின்னர், அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று மன்னிப்புக் கோரியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதேவேளை கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற மேதினக் கூட்டத்திலும் ஜனாதிபதியை பொன்சேகா விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் ஜனாதிபதியிடம் பொன்சேகா மன்னிப்பு கோர வேண்டும் என பல உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே கடந்த 8ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பொன்சேகா ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கோரியதாக செய்திகள் வெளியாகின.

எனினும் தான் அவ்வாறு மன்னிப்பு கோரவில்லை என பொன்சேகா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தேன். இதன்போது சமகால அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டது.எனினும், ஜனாதிபதியிடம் நான் மன்னிப்பு கோரவில்லை. தான் மன்னிப்பு கோரியதாக வெளியான செய்திகளை நிராகரிக்கின்றேன்.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :