நான்கு பிள்ளைகள் உட்பட 7 பேர் படுகொலை?

0
1251
Osmington Murder Suicide

Osmington Murder Suicide

தென் மேற்கு அவுஸ்திரேலியாவில் Osmington பகுதியில் பண்ணை வீடொன்றில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நான்கு குழந்தைகள், 3 பெரியவர்களின் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து துப்பாக்கிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் 8- 13 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் கொலை- மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.