அடிமைத்தனத்திற்கு நினைவுச்சின்னமா???

0
777
monumental develop slavery victims France

பிரதமர் எத்துவா பிலிப் (Édouard Philippe) நேற்றைய தினம், ‘பரிஸில் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நினைவுச் சின்னம் ஒன்று விரைவில் அமைக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்.monumental develop slavery victims France

பரிஸில் அடிமைத்தனத்துக்கு எதிராகவும், அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் (victimes de l’esclavage) நினைவுச் சின்னம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவுச் சின்னம் லூவர் அருங்காட்சியகத்துக்கு அருகில் உள்ள Tuileries தோட்டத்தில் (jardin des Tuileries) அமைக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, ‘பரிஸில், அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எனது முழு ஆதரவினை தெரிவிக்கின்றேன்!’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அடிமைத்தனம், இனவாதம் மற்றும் அடக்குமுறையால் பாதிப்புக்குள்ளான அனைவரிற்காகவும் இந்த அடையாளச் சின்னம் விரைவில் அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அத்துடன், இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**