அறுவைச் சிகிச்சையின் போது வைத்தியரின் காலில் வீழ்ந்த கட்டில்

0
1145
Shocking incident Karapitiya Teaching Hospital Galle

(Shocking incident Karapitiya Teaching Hospital Galle)
காலி கராப்பிடிய ஆதார வைத்தியசாலையில் புற்றுநோயாளி ஒருவரின் குடலில் உள்ள கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென கட்டில் விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த வைத்திய நிபுணரின் காலில் புற்றுநோயாளியுடன் குறித்த கட்டில் விழுந்துள்ளது.

இதனால் வைத்தியரின் காலின் பெரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதனால் அவருக்கு ஒன்றரை மணி நேர பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டுள்ளது.

புற்று நோயாளியின் சத்திர சிகிச்சை நிறைவடையும் தறுவாயில் இருந்த போதே சுமார் இரண்டு தொன் எடையுள்ள இந்த கட்டில் அறுவை சிகிச்சை நிபுணரின் காலில் வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெறும் போது புற்று நோயாளியின் குடலில் இருந்த கட்டி அகற்றப்பட்டிருந்ததாகவும் அறுவைச் சிகிச்சைக்காக வெட்டப்பட்ட வயிற்றை தைப்பது மாத்திரதே மிகுதியாக இருந்தது.

இதனால், இந்த புற்று நோயாளிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறுவை சிகிச்சை நிபுணர் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் வைத்திய நிபுணர் எனவும் இந்தச் சம்பவம் நடைபெற்ற அன்று ஏற்கனவே அவர் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Shocking incident Karapitiya Teaching Hospital Galle