அயர்லாந்து அணியின் முதல் டெஸ்ட் போட்டிக்கு வந்த சோதனை!

0
610
Ireland vs Pakistan maiden Test match 2018 news Tamil today

(Ireland vs Pakistan maiden Test match 2018 news Tamil today)

Update :
அயர்லாந்து அணி இன்று விளையாடவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி மழைக்காரணமாக தாமதமாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்த இந்த போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சி இடம்பெறுவதற்கு முன்னர் மழை குறுக்கிட்டதால் இதுவரையில் போட்டி ஆரம்பிக்கப்படவில்லை.

இதனால் முதல் நாள் போட்டி ஆரம்பமாகுமா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி இன்று டப்லினில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 அந்தஸ்தை மாத்திரம் பெற்று விளையடி வந்த அயர்லாந்து அணியின் டெஸ்ட் கனவு நிறைவேறும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

2007ம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில், அயர்லாந்து அணி, மே.தீவுகள் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்திருந்தது. தற்போது அதே தினத்தில் தங்களது கிரிக்கெட் கனவான டெஸ்ட் கனவை அயர்லாந்து அணி பூர்த்திசெய்யவுள்ளது.

……………………………………………………………………………………………………….

இந்த போட்டியில் விளையாடும் அயர்லாந்து அணியில் அனுபவம் மிக்க வீரர்கள் இணைக்கப்படவுள்ளனர். எனினும் அறிமுக போட்டி என்பதால் அணியில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு போட்டித் தன்மை காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியை பொருத்தவரையில் இளம் வீரர் இமாம் உல் அக் டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகமாவார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

<<Tamil News Group websites>>