மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு

0
1052
Upcountry martyrs remember week

(Upcountry martyrs remember week)
மலையக மக்களின் உரிமைக்காகவும், மண்ணுக்காகவும் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஹட்டன் இந்திரா மண்டபத்தில் இடம்பெற்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா. ஜீவன் ராஜேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக அதிதிகளாலும், பொது மக்களாலும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து மலையக தியாகிகள் தொடர்பாக அதிதிகளால் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புகள், பிரிடோ நிறுவன நிகழ்ச்சித் திட்ட இயக்குநர் என பலரும் கலந்துகொண்டனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Upcountry martyrs remember week