திருகோணமலையில் அதிகாலை இடம்பெற்ற சம்பவம் : வர்த்தகர் சுட்டு கொலை

0
955
gun shooting one killed trincomalee

(gun shooting one killed trincomalee)
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சிறிமாபுர பிரதேசத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்த நபர் மீது, காரில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சிறிமாபுர பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதுடைய ஹேந்தவித்தாரன செலின் குமார எனப்படும், தெல் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :