இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

0
652
Danzari takes place Johor Minister today, malaysia tamil news, malaysia, malaysia 14 election, malaysia election,

{ Danzari takes place Johor Minister today }

மலேசியா, ஜோகூர் மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் ஜோகூர் மாநில மந்திரி பெசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ள விருக்கின்றார்.

இன்று காலை ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்காண்டாரை அவர் அரண்மனையில் சந்தித்துள்ளார்.

மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடையில் ஜோகூர் சுல்தான் அரண்மனைக்கு காலை 11.30க்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும், முன்னாள் துணைப்பிரதமருமான அவர், ஜோகூர் சுல்தானை சந்தித்து, மாநில அரசாங்கத்தை அமைக்க அனுமதி கோரியுள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் துங்கு இஸ்மாயிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஜோகூர் மாநிலம் அம்னோவின் கோட்டையாக விளங்கியது. ஆனால் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி முதல் முறையாக ஜோகூர் ஆட்சி அதிகாரத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

26 நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட ஜோகூரில் 18 சட்டமன்றத் தொகுதிகளை நம்பிக்கை கூட்டணி வென்றுள்ளது.

மாறாக 8 நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி வென்றுள்ளது. இதில் 7 தொகுதிகளை அம்னோவும், 1 தொகுதியை ம.சீ.ச.வும் வென்றுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகளை பொறுத்தவரையில் நம்பிக்கை கூட்டணி 36 தொகுதிகளை வென்று ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ளது.

மாறாக தேசிய முன்னணி 19 தொகுதிகளை பெற்ற வேளையில் 1 தொகுதியை பாஸ் வென்றுள்ளது.

இன்று டான்ஸ்ரீ முகைதீன் ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Danzari takes place Johor Minister today

<< TODAY MALAYSIA NEWS>>

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!

*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து

*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்

*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

<<Tamil News Groups Websites>>