பாலியல் வல்லுறவு வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டு உறுதி

0
590
CBI chargesheet against MLA Kuldeep Singh confirmed

CBI chargesheet against MLA Kuldeep Singh confirmed

இந்திய உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங் மீதான குற்றத்தை சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமியொருவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல்  வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கடந்த வருடம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகார் அளித்து ஒரு வருடமாகியும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அண்மையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அதன்பின், இந்தப் பிரச்சினை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாகவும் பா.ஜ.க. எம்.எல்.ஏவை கைது செய்யக் கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

பின்னர், இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

கடந்த சில நாள்களாக நடந்துவந்த விசாரணைக்குப் பின், குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ. உறுதிசெய்துள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், “உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை காப்பாற்றுவதற்காக அம்மாநில பொலிஸார் முயன்றுள்ளனர். இதன் சான்றாக அவரின் பெயரை முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை.

மேலும், அந்தச் சிறுமியின் இரத்த மாதிரி மற்றும் உடையைத் தடயவியல் துறைக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

CBI chargesheet against MLA Kuldeep Singh confirmed

more Time Tamil News Today

Time Tamil News Group websites :