தந்தையின் கவனக்குறைவு : ஒரே ஒரு மகள் பரிதாபமாக பலி : வவுனியாவில் அதிர்ச்சி

0
2188
5 old girl died vavuniya cheddikulam

(5 old girl died vavuniya cheddikulam)
வவுனியா செட்டிக்குளம் – வீரபுரம் பகுதியில் தந்தையின் வேனில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகந்தன் துசாந்தினி என்ற 5 வயது சிறுமியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனது தொழிலுக்குச் செல்கின்ற போது தனது மகளையும் முள்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கிவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார் உயிரிழந்த சிறுமியின் தந்தை .

அவ்வாறே புதன் கிழமையும்(9) காலை வீட்டிருந்து வேனில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை முன்பள்ளியில் மகளை இறக்கிவிட்டுவிட்டு வாகனத்தை திருப்பிய போது வழமைக்கு மாறாக மகள் வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக முன்பள்ளிக்கு நுழைவதற்கு எத்தனித்த போது வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.

உடனடியாக தந்தை மகளை செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் , அங்கிருந்து சிறுமி வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அதீ தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிசை அளிக்கப்பட்டதோடு அறுவை சிகிசையும் மேற்கொள்ளப்பட்டது.

இருந்தும் மருத்துவர்களால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இறந்த சிறுமி அவர்களின் ஒரேயொரு மகள் என்பது குறிப்பிடத்தக்கது

குறித்த சம்பவம் அந்த பிரதேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :