விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!

0
1091
Two boys drowned pond Carrières-sous-Poissy

Carrières-sous-Poissy இலுள்ள குளத்தில் புதன்கிழமை (மே 9) இல் இரு சிறுவர்கள் மூழ்கியுள்ளனர். அதில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன், மற்றைய சிறுவன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.Two boys drowned pond Carrières-sous-Poissy

புதன்கிழமை மாலை 7.00 மணி அளவில், Carrières-sous-Poissy இல் உள்ள ‘பழைய பண்ணை குளம்’ என அழைக்கப்படும் பகுதிக்கு அருகில் நான்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், அதில் இரு சிறுவர்கள் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

அத்துடன் இருவரில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், இரண்டாவது சிறுவன் பரிஸ் Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோதும் முதலாவது சிறுவனை காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**