இன்றைய ராசி பலன் 10-05-2018

0
699
Today horoscope 10-05-2018

(Today horoscope 10-05-2018)

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 27ம் தேதி, ஷாபான் 23ம் தேதி,
10.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 9:00 வரை;
அதன் பின் ஏகாதசி திதி, சதயம் நட்சத்திரம் காலை 9:55 வரை;
அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண, சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
குளிகை : காலை 9:00–10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
நண்பர், உறவினரால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.

ரிஷப ராசி நேயர்களே !
குடும்பத்தினர் ஆதரவு வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில்,வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார். பெண்கள் அதிகம் பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.

மிதுனம் ராசி நேயர்களே !
குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறை உடனுக்குடன் சரி செய்வது நல்லது. லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடக ராசி நேயர்களே !
குடும்பத்தினர் ஆதரவு வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில்,வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார். பெண்கள் அதிகம் பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.

சிம்ம ராசி நேயர்களே !
திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நடந்தேறும். தொழில் வியாபார நடைமுறை துரிதகதியில் இயங்கும். லாபம் பன்மடங்கு உயரும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே !
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராவர்.

துலாம் ராசி நேயர்களே !
மனதில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்கள் வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி பற்றி பேச்சு நடந்தேறும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
பேச்சு, செயலில் உற்சாகம் வெளிப்படும். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் உயரும். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவர்

தனுசு ராசி நேயர்களே !
அனுபவசாலிகளின் அறிவுரையை ஏற்று நடப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். லாபம் பெருகும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மகர ராசி நேயர்களே !
மற்றவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்களுக்கு நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சுபநிகழ்ச்சி நடத்தி திட்டமிடுவீர்கள்.

கும்பம் ராசி நேயர்களே !
மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். உடல்நலனில் அக்கறை தேவை.

மீனம் ராசி நேயர்களே !
சிலர் உங்களிடம் உதவி கேட்டு அணுகுவர். தொழில், வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

keyword:Today horoscope 10-05-2018