இன அழிப்பு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் பிரகடனம்

0
1364
Mullivaikal remember day Declaration Ethnic cleansing day

(Mullivaikal remember day Declaration Ethnic cleansing day)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும் தமிழ்த் தேசிய இனத்தின் துக்க நாளாகவும் வடமாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

வடமாகாண சபையின் 122 ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்த போதே இந்தப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குறித்த பிரகடனத்திற்கான பிரேரணையை சபைக்கு கொண்டுவந்தார்.

இதன்போது மே 18 ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளாகவும், தமிழ்த் தேசிய இனத்தின் துக்க நாளாகவும் வடமாகாண சபை பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ. ஜெயசேகரம் வழிமொழிந்தார். இதனை தொடர்ந்து சபையில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Mullivaikal remember day Declaration Ethnic cleansing day