மலேசியாவில் 92 வயதில் பிரதமராக போகும் மகாதீர்: இன்று பதவி ஏற்றுவிடுவாரா..?

0
763
Mahathir prime minister age 92 today, malaysia tamil news, malaysia 14 general election, malaysia, malaysia tamil news,

{ Mahathir prime minister age 92 today }

மலேசியா, மத்திய அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதை மாமன்னர் சுல்தான் முஹம்மட்விடம் தெரியப்படுத்தும் நோக்கில் அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தனது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அலியுடன் புரோட்டோன் 2020 எனும் எண் பட்டைக் கொண்ட புரோட்டோன் பெர்டானா ரகக் காரில் இஸ்தானா நெகாரான் அரண்மனைக்கு சென்றுள்ளார்.

2020இல் வளர்ச்சிக் கண்ட நாடாக மலேசியாவை உருவாக்கும் நோக்கில் துன் மகாதீர் நாட்டின் 4ஆவது பிரதமராக இருந்த காலத்தில் கூறியிருந்தார்.

அதனை தெரியப்படுத்தும் வகையில் அவர் அந்த எண் பட்டைக் கொண்ட காரில் சென்றதாக கருதப்படுகின்றது.

மாமன்னரைச் சந்திக்க துன் மகாதீருடன் ஹராப்பான் தலைவர்களான பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா இஸ்மாயில், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முஹம்மட் சாபு ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

பிரதமர் பதவி ஏற்பதற்கான சடங்கை நடத்துவதற்கு மாமன்னரின் அனுமதியைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட இரண்டு ஆவணங்களை இஸ்தானா நெகாரா பெற்றிருப்பதாக பெரித்தா ஹரியான் இணையத்தள செய்தி பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாவது ஆவணத்தை இன்று மணி 1.38 அளவில் மாமன்னரின் தனிப்பட்ட செயலாளர் டத்தோ நிக் முஹம்மட் ஷாப்ரிமான் நிக் ஹாசான் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் துன் மகாதீரை நாட்டின் 7ஆவது பிரதமராக பதவியேற்பதற்கு முன்மொழியும் வகையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாலை மணி 2.45 அளவில் மற்றொரு ஆவணமான மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முஹம்மட் ஹாஷிம் அப்துல்லா வழங்கிய 14ஆவது தேர்தலுக்கான நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் துன் மகாதீரின் பிரதமர் பதவியை ஏற்கும் சடங்கை நடத்தும் பொருட்டு மாமன்னரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags: Mahathir prime minister age 92 today

<< TODAY MALAYSIA NEWS>>

*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!

*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து

*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்

*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

*கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

<<Tamil News Groups Websites>>