வடமாகாணத்தில் 951 விபத்துக்கள் ; 16 பேர் பலி

0
1220
951 accidents Northern Province 16 killed

(951 accidents Northern Province 16 killed)
வடமாகாணத்தில் 2018 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 951 விபத்துக்கள் நடந்துள்ளதாக வடமாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் வட மாகாணத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டத்தை கொண்டு வரப்படவேண்டும் எனக் கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 122 ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது இந்த தீர்மானத்திற்கான பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் த. குருகுலராஜா சபைக்கு கொண்டு வந்தார்.

பிரேரணையை சபைக்கு கொண்டு வந்த குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில், கடந்த 2017 ஆம் ஆண்டில் வட மாகாணத்தில் 1500 ற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன.

அதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 315 பேர் தலையில் பலத்த காயமடைந்துள்ளனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 951 பேர் விபத்துக்களில் சிக்கி அதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறினார்.

இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

போக்குவரத்து பொலிஸார் வீதி ஒழுங்குகளைப் பார்க்காமல் தமது மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு இலஞ்சம் கேட்கிறார்கள். மேலும் மக்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் போதிய விழிப்புணர்வில்லை என்றார்.

தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி. தவராசா கூறுகையில், வடமாகாணத்தில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. இதனை விட பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகள் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்துவதில்லை. இதனாலும் விபத்துக்கள் நடக்கின்றன.

அந்தவகையில் மக்கள் மத்தியில் விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டலை செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும். தண்டணைகள் கடுமையாக்கப்பட வேண்டும். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் அதனை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 951 accidents Northern Province 16 killed