இன்றைய ராசி பலன் 09-05-2018

0
707
today-horoscope-09-05-2018

(Today horoscope 09-05-2018)

இன்று!
விளம்பி வருடம், சித்திரை மாதம் 26ம் தேதி, ஷாபான் 22ம் தேதி,
9.5.18 புதன்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 8:08 வரை;
அதன் பின் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் காலை 8:12 வரை;
அதன் பின் சதயம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : அம்பிகை, ராமர் வழிபாடு

மேஷ ராசி நேயர்களே !
இஷ்ட தெய்வ வழிபாட்டால் காரிய வெற்றி ஏற்படும் நாள். பொது நல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடரும். நிதி நிலை உயரும்

ரிஷப ராசி நேயர்களே !
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள்.மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மிதுனம் ராசி நேயர்களே !
விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடுகட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புண்ணிய காரியங்களுக்காக சிறிது தொகையை செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

கடக ராசி நேயர்களே !
சந்தோ‌ஷம் பெருக அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகச் சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

சிம்ம ராசி நேயர்களே !
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். பிரதிபலன் பார்க்காமல் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே !
நம்பிக்கைகள் நடைபெற குலதெய்வத்தை வழிபட வேண்டிய நாள். கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல் நிலையில் சோர்வு ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே !
குலத்தெய்வ வழிபாட்டால் வெற்றிகள் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகலாம்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்குவதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.

தனுசு ராசி நேயர்களே !
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வியாபார விருத்தி ஏற்படும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மகர ராசி நேயர்களே !
குலதெய்வத்தை வழிபட்டு ஆனந்தம் காண வேண்டிய நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.

கும்பம் ராசி நேயர்களே !
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்

மீனம் ராசி நேயர்களே !
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். தனவரவு உண்டு. தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். பெற்றோர் வழியிலும் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 09-05-2018