பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த போகிறார் விக்கி : கொந்தளிக்கும் சிங்கள ஊடகங்கள்

0
1199
cv wigneswaran prabaharan

(cv wigneswaran prabaharan)
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் எதிர்வரும் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நினைவஞ்சலி செலுத்தவுள்ளதாக சிங்கள் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றை சி.வி. விக்னேஸ்வரன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வை நடத்துவதற்கு வட மாகாண முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் கடந்த 7ஆம் திகதி தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகாமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளதோடு இந்த நிகழ்வில் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சி.வி. விக்னேஸ்வரன் போரில் உயிரிழந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை